போராடிப் பார் ஆன்மா மகிழும்!
சீமை கருவேலமரங்களை அழித்து 110 ஏக்கரில் விவசாயம் நடைபெறுகிறது. மகிழ்கிறது மனம்!
-------------------------- ------------
விவசாயத்திற்கு மீண்டும் புத்துயிர் அளித்த பள்ளத்தூர் விவசாயிகளுக்கு ஒரு ராயல் சல்யூட்...!
வெளிநாட்டு மோகத்தை விடுத்து பல ஆண்டுகளாக சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பில் இருந்த நிலத்தை சீரமைத்து விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர் பள்ளத்தூர் விவசாயிகள்.
போதிய மழையின்மை,ஆர்வம் குறைந்ததால்,கடந்த 15 ஆண்டுகளாக விவசாயம் படிப்படியாக குறைந்து வருகிறது. செல்வத்துக்காக கடல் கடந்து வேலை செய்து, குடும்பத்தினரை சந்திக்க முடியாமல்,நல்லது கெட்டதுக்கு வர முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானோர்.இந்நிலை என்று மாறுமோ? என்று ஏங்கி தவிக்கும் சமுதாயத்துக்கு மத்தியில் நாங்கள் மாறியுள்ளோம் என கூறுகின்றனர் பள்ளத்தூர் விவசாயிகள்.
காரைக்குடி அருகே பள்ளத்தூர் பெரிய கண்மாய் மூலம் முப்போகம் விளைந்த 140 ஏக்கர் நிலத்தில் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக சீமை கருவேல மரங்கள் மண்டி கிடந்தது. யார் சீரமைப்பார்கள்? என்று ஏங்கியிருந்த நேரத்தில் முயற்சி செய்து பார்ப்போம்,முப்போகம் விளைந்த இடத்தில் ஒரு போகமாவது விளைய வைப்போம் என்று வெளிநாட்டில் இருந்து வந்த முன்னாள் விவசாயிகளும், பல்வேறு வேலைக்கு சென்ற இந்நாள் விவசாயிகளும் முயற்சித்தனர். ஊரும் இவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தது.100-க்கும் மேற்பட்டோருக்கு பாத்தியப்பட்ட இடத்தை சுற்றிலும் ரூ.8 லட்சம் செலவில் கம்பிவேலி அமைக்கப்பட்டது. சீமை கருவேல மரங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு தற்போது 110 ஏக்கரில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு 140 ஏக்கர் விவசாயம் செய்து காட்டுவோம் என்கின்றனர் இவ்வூர் விவசாயிகள்.
இனி அடுத்தடுத்து மற்ற ஊர்களும் பள்ளத்தூர் விவசாயிகளைப் பார்த்து விவசாயத்திற்கு மாறும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை...!!! ஆனால், இந்த மாற்றத்திற்கு, பள்ளத்தூர் விவசாயிகள்தான் முன்னோடிகளாக விளங்குவார்கள்........!!! உங்கள் பாதம் பணிந்த எங்களின் வாழ்த்துகளும், பாராட்டுகளும் விவசாயக் குடிமக்களே.....!!!
- சீமை கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்
Highly commendable...
ReplyDeleteHighly commendable...
ReplyDeleteவரவேற்க்கதக்கது.
ReplyDeleteஎன் உடைந்த மனம் இப்பொழது உயிர் பெறுகிறது!! காரணம் என் பிறந்த மண் உயிர் பெறுவதால்!
I am feeling alive becoz of my soil getting its life back again..
These species were not an existence from our soil, its bought from Mexico by the aliens(who invaded India) and they landed into our Tamil soil. Lets forgive them as they did unconsciously, for their own selfishness..
"Tamil the greatest ever live for ever"!!
வரவேற்க்கதக்கது.
ReplyDeleteஎன் உடைந்த மனம் இப்பொழது உயிர் பெறுகிறது!! காரணம் என் பிறந்த மண் உயிர் பெறுவதால்!
I am feeling alive becoz of my soil getting its life back again..
These species were not an existence from our soil, its bought from Mexico by the aliens(who invaded India) and they landed into our Tamil soil. Lets forgive them as they did unconsciously, for their own selfishness..
"Tamil the greatest ever live for ever"!!
WORK HARD & REMOVE THE **EVIL TREE**---THANK YOU
Deleteபள்ளத்தூர் விவசாயிகளுக்கு எனது வணக்கங்கள்.
ReplyDeleterockfortgeorge@gmail.com