Home » » பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் கிராம வளர்ச்சி தொடர்பான அதிகாரிகள்

பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் கிராம வளர்ச்சி தொடர்பான அதிகாரிகள்

Written By கருவேலமரம் ஒழிப்பு இயக்கம் on Tuesday, 30 December 2014 | 13:14


பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் கிராம வளர்ச்சி தொடர்பான அதிகாரிகள் தமிழக அரசு மேற்கொண்டுவரும் முயற்சிக்கு ஆதரவளிக்கவும்.


ஒரு அரசின் கீழ் இயங்கும் இயக்குனர் தங்களிடம் வேண்டிக் கொள்ளும் கடிதம் கிடைக்கப்பெற்றேன். சீமை கருவேலமரங்களை அழிப்பதில் நாம் காட்டும் தாமதம் மிகவும் ஆபத்தான சூழலை உருவாக்கும்.



அதிகாரிகளின் வாரிசுகளும் சேர்ந்துதான் பாதிக்கப்படப் போகிறார்கள் . கடந்த 15 ஆண்டுகளில் தமிழகம் கடுமையான வறட்சிக்கு தள்ளப்பட்டிருப்பதை அனைவரும் கண்கூடாக பார்த்த உண்மை. அதற்கு முக்கியக் காரணம் இந்த சீமை கருவேலமரம். 

அரசும் அதன் கீழ் இயங்கும் துறை தலைவர்களும் என்னதான் திட்டங்களை நடைமுறைப் படுத்தினாலும் அதை சீரும் சிறப்புமாக முடிக்க கிராம அலுவலர்கள் ஒத்துழைப்பு மிக முக்கியம். 

கிராமங்கள் அழிந்துவருவதை தடுக்க , மக்கள் குடிபெயர்வதை தவிர்க்க மக்களும் அரசும் இணைந்து பாடுபட வேண்டிய சூழலில் இருக்கின்றோம். நமது தவறுகளால் நாம் பாதிக்கப்படலாம் நம்முடைய சின்னஞ் சிறார்கள் , வளரும் சிசுக்கள் என்ன பாவம் செய்தது? அவர்களுக்கு நாம் நிம்மதியான வாழ்வை பசுமையான நிலப்பகுதி மூலமாகத்தான் கொடுக்க இயலும். வேறு ஏதும் வழியுண்டா கூறுங்கள்?

சிந்தித்து இணைவோம்... செய்வோம்!

நன்றி
ஏனாதி பூங்கதிர்வேல்,
சீமை கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,
விவசாயிகள் விடுதலைக் கழகம்,
சென்னை - தமிழ்நாடு.

மின்னஞ்சல் : aaproject.tn@gmail.com
தொடர்பு எண் : 7811844866
SHARE

0 comments :

Post a Comment